வட்டார தடகள போட்டியில் குருகால்பேரி பள்ளி மாணவிகள் சாதனை

நாசரேத் வட்டார தடகள போட்டியில் குருகால்பேரி பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-09-14 13:34 GMT

தட்டார்மடம்:

நாசரேத் வட்டார அளவிலான தடகளப்போட்டிகள் சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் டி.என்.டி.டி.ஏ. குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது. இதில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான சுப்பர் சீனியர் பிரிவில் 100 மீட்டர் ஓட்டத்தல் மாணவி சுபஷா முதலிடமும், உயரம் தாண்டுதலில் மாணவி முருகவள்ளி முதலிடமும், ஈட்டி எறியதில் மாணவி ஷேரன்ஜோனா முதலிடம், 1500 மீட்டர் ஓட்டத்தில் மாணவி முனிஷா முதலிடம், கம்பு ஊனறி தாண்டுதலில் மாணவி லின்சி முதலிடம், மாணவி முருகவள்ளி 2-ஆம் இடம், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மாணவி முத்துலட்சுமி முதலிடம், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் மாணவி சுபிஷா 2ஆம் இடம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3-ஆம் இடம் பெற்றனர். சீனியர் பிரிவில், கம்பு ஊன்றி தாண்டுதலில் மாணவிகள் ரிசன்யா, ஷேரன் ஜோனா முதலிடம், மாணவிகள்டேலியா, சரண்யா 2-ஆம் இடம், 400 மீட்டர் ஓட்டத்தில் மதிவதனி முதலிடம், 200 மீட்டர் ஓட்டத்தில் மதிவதனி முதலிடம், குண்டு எறியதிலில் மாணவி சைனிஷா 2-ஆம் இடம், உயரம் தாண்டுதலில் மாணவி மதிவதனி 2-ஆம் இடம், வட்டு எறிதலில் மாணவி சுதாலட்சுமி 2-ஆம் இடம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 2-ஆம் இடம் பிடித்தனர். சூப்பர் சீனியர் பிரிவில் 3ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மாணவி முனிஷா 3-ஆம் இடம், 1500 மீட்டர் ஓட்டத்தில் மாணவி சிவசக்தி 3-ஆம் இடம், டிரிபில் ஜம்ப் போட்டியில் மாணவி மஞ்சுளா 3-ஆம் இடம், 200 மீட்டர் ஓட்டத்தில் மாணவி மாடத்தி 3-ஆம் இடம், குண்டு எறிதலில் மாணவி ஜெனோலியா 3-ஆம் இடம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3-ஆம் இடம் பெற்றனர்.

பல போட்டியில் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவிகளை பள்ளி தாளாளர், வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன், பள்ளி தலைமை ஆசிரியை குளோரி, உடற்கல்வி ஆசிரியர் வெர்சின் அன்பரசி மற்றும் பெற்றோர்கள், மாணவிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்