போலீசாரை தாக்க முயன்றவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

போலீசாரை தாக்க முயன்றவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-07 17:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள வாணக்கன்காட்டில் நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டாஸ்மாக் கடை அருகே அனுமதி இல்லாமல் இயங்கி வரும் பாரில் மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பரிமளம் என்பவரை வடகாடு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்லும் வழியில், பரிமளத்தை கொண்டு செல்ல விடாமல் தடுத்ததோடு, போலீசாரை தாக்க முயன்ற அப்பகுதியை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மற்றும் வாணக்கன்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்