உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனியில் காங்கிரஸ் உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-06-04 13:56 GMT

தேனியில் காங்கிரஸ் உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கி பேசினார். இதில், உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீர் வெளியிட்டார். மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்