வைகை அணையின் கட்டுமானம் குறித்துதொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி

வைகை அணை கட்டுமானம் குறித்து தொழிற்பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-06-01 18:45 GMT

தேனி அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் கட்டிட பட வரைவாளர் பாடப்பிரிவில் மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வைகை அணையில் கட்டுமானம் குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி நடந்தது. பயிற்சியின்போது, வைகை அணையின் மதகுபகுதி, கசிவுநீர் சுரங்கம், அணையின் பிரதான பகுதி மற்றும் பிக்கப் அணை பகுதிக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு வைத்து அணையின் கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம், நீர்ப்பாசனம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தேனி அரசு தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் சேகரன், உதவி பயிற்சி அலுவலர் அனந்தகிருஷ்ணன், வைகை அணையின் உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். அணையின் முக்கிய பகுதிகளுக்கு பொதுப்பணித்துறை பணியாளர் கணேசன் மாணவர்களை அழைத்து சென்று காட்டினார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்