இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தட்டு ஏந்தி போராட்டம்

இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-07 19:01 GMT

ஆவுடையார்கோவில் தாலுகா கரூர் பகுதியை சேர்ந்தவர் சேவுகபெருமாள் (வயது 52). விவசாயியான இவர் கடந்த 4-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சேவுகபெருமாள் இறந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சேவுகபெருமாளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று உடலை வாங்க மறுத்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரியும் அவரது உறவினர்கள் பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முக சுந்தரம் முன்னிலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தாசில்தார் அலுவலத்தின் முன்பு தட்டு ஏந்தி மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்