ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

வெங்கடேஸ்வரா பள்ளியில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-09-10 12:40 GMT

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 1971-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. பயிற்சி பட்டறைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நெப்போலியன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், திருப்பதி திருமலை தேவஸ்தான கல்வி அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் மார்த்தாண்டன் வரவேற்றார். ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசகர்கள் ஸ்ரீ திவ்யா சேகர், கலைச்செல்வி ஆகியோர் புத்தாக்க பயிற்சிகளை வழங்கினர். அப்போது கொரோனா காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது. முடிவில் முன்னாள் மாணவர் சங்க உதவி தலைவர் ராகவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்