பதிவுத்துறை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்

பதிவுத்துறை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் காட்பாடியில் நடந்தது.

Update: 2023-01-07 17:03 GMT

பதிவுத்துறை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு வேலூர் மண்டல பதிவுத்துறை டி.ஐ.ஜி. சுதா மல்யா தலைமை தாங்கினார். முகாமில் வேலூர் மாவட்ட உதவி பதிவுத்துறை தலைவர் சுடரொளி மற்றும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செய்யாறு பதிவுத்துறை மாவட்ட அலுவலர்கள், சார் பதிவாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முகாம் காலை 10 மணி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த முகாமில் பதிவுத்துறையில் புதிதாக போடப்பட்ட அரசாணைகள் மற்றும் சார்பதிவாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்