தற்சார்பு உழவர்கள் உரிமை மீட்பு அமைப்பு கூட்டம்
விழுப்புரத்தில் தற்சார்பு உழவர்கள் உரிமை மீட்பு அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் தற்சார்பு உழவர்கள் உரிமை மீட்பு அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் வேலு தலைமை தாங்கினார். ராஜராஜசோழன் விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் கணேசன், உழவர் களம் அமைப்பின் தலைவர் தெய்வீகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் குமார், காத்தவராயன், ராமலிங்கம், பிரபாகரன், சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விடுபட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தி உடனே அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், கிசான் திட்டத்தில் விவசாய தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் சேர்க்க வேண்டும், தமிழக அரசு, வேளாண் பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மைக்கென ஒதுக்கிய நிதியில் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் கால்நடைகளை வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.