ரெட்டி சமுதாயத்தினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதி சான்றிதழ் வழங்கவேண்டும்

ரெட்டி சமுதாயத்தினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதி சான்றிதழ் வழங்கவேண்டும் என்று மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-27 20:28 GMT

தமிழ்நாடு ஓ.பி.ஆர். ரெட்டி நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே நடைபெற்றது. மாநில தலைவர் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட தலைவர் கோபி முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் துரைசாமி வரவேற்றார். வருகிற ஆகஸ்டு மாதம் நலச்சங்கம் சார்பில் சமயபுரத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை அழைப்பது, சென்னையில் அரசினர் தோட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரான ஓமாந்தூராருக்கு சிலை நிறுவ வேண்டும். ரெட்டி சமுதாயத்தினருக்கு ஒரு சில மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஆகவே சாதிசான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார், ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்