செங்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை
சி.பி.எஸ்.இ. தேர்வில் செங்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 17 மாணவ மாணவிகளும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றனர். மாணவி ரோஷன் சபிக்கா கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றார். அவர் தமிழில் 98, அறிவியலில் 92, சமூக அறிவியலில் 94 மதிப்பெண்களைப் பெற்று 94 சதவீதத்துடன் பள்ளியில் முதலிடத்தை பிடித்தார்.
தொடர்ந்து 2-வது முறையாக 100 சதவீத வெற்றியைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆசிரியர்களையும், மாணவ மாணவிகளையும் பள்ளியின் நிறுவனர் முகமது பண்ணையார், தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.