செங்கோட்டையில் மாரத்தான் போட்டி

செங்கோட்டையில் மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2023-02-26 18:45 GMT

செங்கோட்டை:

செங்கோட்டையில் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு மஞ்சள் பை விழிப்புணர்வு குறித்து செங்கோட்டை ராஜ்யம் அறக்கட்டளை, செங்கோட்டை வனத்துறை, செங்கோட்டை அரசு நூலகம் வாசகர் வட்டம், வட்ட சட்டப்பணிக்குழு, தென்காசி மாவட்ட மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி நடந்தது. இந்நிகழ்ச்சியில் 4 வயது சிறுவர்கள் முதல் 85 வயது முதியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது. நான்கு பிரிவாக நடந்த முதல் போட்டியை செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜா, 2-வது போட்டியை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், 3-வது போட்டியை புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர், 4-வது போட்டியை நூலக வாசகர் வட்ட தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்