வட தமிழக கடலோர பகுதிக்கு 'ரெட் அலர்ட்' - சென்னையில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு...!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முத்ல கனமழை பெய்து வருகிறது.

Update: 2022-11-11 04:31 GMT

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இருந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் - புதுவை கடலோரம் வரம். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 13-ம் தேதி தமிழ்நாட்டில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மழையை கொடுக்கக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக கடலோர பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்