தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-11-17 21:43 GMT

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது42), கட்டிட தொழிலாளி. இவருக்கு சித்ரா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கீழ்குளம் அருகே உள்ள வில்லாரிவிளையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக ெதரிகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சித்ரா கடந்த ஒரு வாரமாக குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இதனால் மனமுடைந்த முருகன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்