சித்தோடு அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

சித்தோடு அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-11 21:57 GMT

பவானி

சித்தோடு அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவில் நிலம்

சித்தோடு அருகே கங்காபுரத்தில் பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 1886-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட மகாராஜா 8.48 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளார்.

அப்போது அந்த பகுதியின் மணியக்காரராக பணியாற்றி வந்தவர் அந்த நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

விவசாயம்

இதையறிந்த அப்பகுதி மக்கள் 1952-ம் ஆண்டு அந்த நிலத்தை மீட்டு மீண்டும் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்துள்ளது.

ரூ.50 கோடி நிலம் மீட்பு

இதையறிந்த கோவிலின் செயல் அலுவலர் கிருத்திகா தலைமையில் நில அளவையர்கள் நிலத்தை அளவீடு ெசய்தனர். அப்போது அந்த நிலத்தில் இருந்த விவசாய பயிர்களை அகற்றி, ரூ.50 கோடி மதிப்புள்ள 8.48 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்