தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1½ கோடி நிலம் மீட்பு
திருவாரூர் அருகே தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1½ கோடி மதிப்புடைய நிலத்தை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருவாரூர் அருகே தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான ரூ.1½ கோடி மதிப்புடைய நிலத்தை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
தியாகராஜர் கோவில் நிலம்
திருவாரூர் அருகே திருப்பள்ளிமுக்கூடல் கிராமத்தில் தியாகராஜர் கோவில் அபிசேக கட்டளைக்கு சொந்தமான நன்செய் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டார்.
அதன்படி உதவி ஆணையர் ராணி, தாசில்தார் லட்சுமி பிரபா ஆகியோர் திருப்பள்ளிமுக்கூடல் பகுதியில் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர். இதில் கோவிலுக்கு சொந்தமான 19 ஏக்கர் 54 சென்ட் நன்செய் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது தெரியவந்தது.
ரூ.1½ கோடி மதிப்பு
இதனையடுத்து நிலத்தை அதிகாரிகள் மீட்டு, அங்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலம் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்புடையது என இந்துசமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.
இதே போல் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் வேறு எங்கேயாவது ஆக்கிரமிப்பில் உள்ளதா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.