பெண்ணிடம் போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நிலம் மீட்பு

நெல்லையில் பெண்ணிடம் போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நிலம் மீட்கப்பட்டது.

Update: 2023-02-24 20:58 GMT

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவர் மும்பையில் தங்கியிருந்து பால் வியாபாரம் செய்து வந்தார். அங்கு பால் வியாபாரம் செய்து சேமித்து வைத்த பணத்தில் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் இட்டேரி, ராம்நகர் பகுதியில் 5 செண்ட் நிலத்தை வாங்கினார். கொரானா காலத்தில் மும்பையில் போதிய வருமானம் கிடைக்காத சூழ்நிலையில் சொந்த ஊர் திரும்பிய ஜெயலட்சுமி, தான் வாங்கிய நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது அந்த இடம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயலட்சுமி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரது உத்தரவுப்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள்பானு, சப்-இன்ஸ்பெக்டர் சாவித்ரி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிலத்தை மீட்டனர். இதையடுத்து அந்த நிலத்துக்குரிய ஆவணத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று ஜெயலட்சுமியிடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்