ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

அரக்கோணம் அருகே ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

Update: 2023-05-23 18:23 GMT

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் 40 சென்ட் தோப்பு நிலத்தினை கடந்த 25 ஆண்டுகளாக சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவது குறித்து வருவாய் துறையினருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து நேற்று அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் நில அளவையர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்து நான்கு பக்கங்களிலும் கல் நட்டனர்.

மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இந்த பணியின் போது அரக்கோணம் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்