சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பதிவேடுகள் பாதுகாப்பு பெட்டகம்
சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பதிவேடுகள் பாதுகாப்பு பெட்டகத்தை வார்டு உறுப்பினர் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தினமும் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு ஒரு மாதத்திற்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட பிரசவம் நடக்கிறது. பிறந்த குழந்தைகள் குறித்த மருத்துவ பதிவேடுகள் வைக்க பெட்டகம் வேண்டும் என நகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சநேயனிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை ஏற்று 5-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சநேயன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20,000 மதிப்பிலான பாதுகாப்பு பெட்டகத்தை மருத்துவ அலுவலர் இளங்கோவனிடம் வழங்கினார். அப்போது மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.