சீர்காழியில் வரலாறு காணாத மழை

சீர்காழியில் வரலாறு காணாத மழை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

Update: 2022-11-19 18:45 GMT

மழைநீர் வடியவில்லை

மழை பெய்து 8 நாட்களான பின்னரும் பல கிராமங்களில் வயல்களில் இருந்து மழைநீர் வடியவில்லை. தண்ணீரில் மூழ்கி இருக்கும் பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'இந்த ஆண்டு மேட்டூர் அணையை நம்பி முன்கூட்டியே சம்பா சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டோம்.

சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத கனமழையால் பயிர்கள் கடந்த 8 நாட்களாக தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. பயிர்கள் அழுகி வீணாகி வருவதால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் தவித்து வருகிறோம்.

விவசாய கடன்கள் தள்ளுபடி

இதற்கு பின்னர் நாற்று விட்டு நடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் இந்த ஆண்டு விவசாயம் கேள்விக்குறியாகி விட்டது. பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறையாக கணக்கெடுப்பு செய்து முறைப்படி இழப்பீடு வழங்கவும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் எங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்