தர்மபுரி விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

தர்மபுரி காந்திநகர் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-06-21 18:43 GMT

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தர்மபுரி காந்திநகர் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த பள்ளி மாணவன் ரோஷன் மற்றும் மாணவி இந்துமதி ஆகியோர் 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் வசந்தரா, திவ்யா ஆகியோர் 592 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பெற்றுள்ளனர். இதேபோன்று மாணவிகள் பத்மபிரபா, லட்சுமிதேவி ஆகியோர் 591 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பெற்றுள்ளனர். இந்த மாணவ, மாணவிகள் அனைவரும் 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த பள்ளி மாணவர்கள் 590 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேரும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 38 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 80 பேரும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 135 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 185 பேரும் பெற்றுள்ளனர். கணிதம் பாடத்தில் 26 பேரும், இயற்பியல் பாடத்தில் 10 பேரும், வேதியியல் பாடத்தில் 14 பேரும், உயிரியல் பாடத்தில் 30 பேரும், வணிகவியல் பாடத்தில் 14 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 31 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் இந்தப் பள்ளி மாணவர்கள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பு

இதேபோல் இந்த பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் தர்ஷினி, லயீக்காஷா ஆகியோர் 494 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவர் சித்தேஸ்வரர் 493 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவர் தருண் 492 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர்கள் 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதே போன்று இந்த பள்ளி மாணவர்கள் கணிதம் பாடத்தில் 18 பேரும், அறிவியல் பாடத்தில் 37 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 16 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 6 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 20 பேர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக் மணிவண்ணன், செயலாளர் டாக்டர் ராம்குமார், இயக்குனர்கள் ஷரவந்தி தீபக், டாக்டர் திவ்யா ராம்குமார், டீன்கள் கவுசல்யா, சம்பத்குமார், முதல்வர் வள்ளியம்மை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்