பர்கூர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை
சிலம்பம் போட்டியில் பர்கூர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
பர்கூர்:
புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில், அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே 3-வது ஆல் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்டு கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா - 2022 சார்பில் 3 நாட்கள் சிலம்பம் போட்டி நடந்தது. இதில் பர்கூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களை பெற்றனர். அதன்படி, இக்கல்லூரியில் எந்திரவியல் துறை 4-ம் ஆண்டு மாணவர் ஆசிப்உடுமன், ஸ்டிக் பென்சிங் என்ற சிலம்பம் போட்டியில் தங்க பதக்கமும், 3-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் சஞ்சய், ஸ்டிக் பென்சிங், தனிநபர் ஸ்டிக் ஆகிய பிரிவுகளில் 2 தங்க பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்தனர். சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் விஜயன், துணை முதல்வர் நபிசாபேகம், உடற்பயிற்சி அலுவலர் தங்கராஜ், உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) செல்வநாயகம் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.