திருச்செங்கோட்டில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Update: 2023-08-19 18:45 GMT

திருச்செங்கோடு

திருச்செங்கோடு நகராட்சியில் அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் மக்களிடம் தேசிய, வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் கடைபிடித்தல் தொடர்பான நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, ஆணையாளர் சேகர் ஆகியோர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் வெங்கடாசலம், மேலாளர் குமரேசன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்