நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் அமராவதி அணையில் இருந்து உயிர்தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் அமராவதி அணையில் இருந்து உயிர்தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-06-22 13:53 GMT

தளி

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் அமராவதி அணையில் இருந்து உயிர்தண்ணீர் திறந்து விடப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதிஅணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.

அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அணையின் நீராதாரங்களான கேரளா மாநிலத்தில் உள்ள மூணார், காந்தலூர், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் நிலவி வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை. சமவெளி பகுதியில் நிலவி வருகின்ற வரட்சியின் காரணமாக தென்னை கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.அத்துடன் ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழலில் உள்ளது. இதன் காரணமாக கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

தண்ணீர் திறக்க கோரிக்கை

இதனால் பொதுமக்கள் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.அதைத் தொடர்ந்து கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உயிர் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதை பரிசீலத்த அதிகாரிகள் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தைப் பொறுத்து கருத்துரு அனுப்பி வைக்க உள்ளதாகவும், அதன் பின்பு அனுமதி பெற்று தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்து உள்ளதுடன் பருவமழையை எதிர்பார்த்தும் காத்து உள்ளனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 64.05அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 240 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 270 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்