ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம சாவு
ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் இறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழிலுடன், விவசாய பணிகளும் செய்து வந்தார். இந்தநிலையில் இவர் தனது வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிருஷ்ணப்பேரி கிராம நிர்வாக அதிகாரி உமாராணி கொடுத்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.