செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லரில் மீண்டும் பழுது

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லரில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.

Update: 2023-05-08 18:12 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் 29-ந்தேதி பாய்லரில் பழுது ஏற்பட்டது. இதனால் 4 நாட்கள் அரவை நிறுத்தப்பட்டது. பின்னர் சரிசெய்யப்பட்டு, அரவை தொடங்கியது.

இந்த நிலையில் மீண்டும் அதே பாய்லரில் பழுது ஏற்பட்டதால் அரவை தொடங்க முடியாமல் 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 2 ஆயிரம் டன் எடையுள்ள கரும்புகள் கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் வயல்களில் வெட்டப்பட்டு லோடுகளில் ஏற்றப்படாமல் அங்கும் கரும்புகள் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதனால் ஆலைக்கு மேலும் அரவைக்காக கொண்டுவரப்படும் கரும்புகளை மற்ற மாவட்டங்களில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு அரவைக்காக திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் கூறுகையில், 'பாய்லரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து விரைவில் அரவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்