நிறுத்தப்பட்ட அரசு விரைவு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்; அமைச்சரிடம் கோாிக்கை மனு
நிறுத்தப்பட்ட அரசு விரைவு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோாிக்கை மனு கொடுக்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம்:
தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ கோரிக்கை மனு அளித்தார்.
அதில், "உடன்குடியில் இருந்து கோவைக்கு தடம் எண் 632 தினசரி மாலை 5.20 மணிக்கும், மாலை 5.15 மணிக்கு உடன்குடி முதல் ஈரோடுக்கும் பல வருடங்களாக அரசு விரைவு போக்குவரத்துகழகம் சார்பில் பஸ் இயக்கப்பட்டது. கடந்த கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப், மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், ஒன்றிய அவைத் தலைவர் ஷேக் முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.