2 இடங்களில் ரேஷன் கடைகள்

அருப்புக்கோட்டையில் 2 இடங்களில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன.

Update: 2022-12-13 19:03 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி நோட்டக்காரர் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மகளிர் சுகாதார வளாகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த மகளிர் சுகாதார வளாகத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து 25 மற்றும் 34-வது வார்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடைகளையும் அமைச்சர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களைவழங்கி ரேஷன் கடையின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், இளைஞர் அணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமேஷ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜோதி ராமலிங்கம், இளங்கோ, தனலட்சுமி, குருமணி, மாவட்ட பிரதிநிதி சிவசங்கரன், நகராட்சி அதிகாரிகள், கூட்டுறவு துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்