கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-09 18:45 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி அருகே ஜமின் கோட்டாம்பட்டி ராமர் கோவில் வீதியில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதற்காக சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கோட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ராமர் கோவில் வீதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு 10 சாக்கு மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் மாப்பிள்ளை கவுண்டனூரை சேர்ந்த குமார் என்பவர் மூலம் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ரேஷன் அரிசியை பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்