மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

வேலூரில் மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-15 17:27 GMT

வேலூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் நேற்று ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் பிளாஸ்டிக் மூட்டைகளுடன் வந்தவரை நிறுத்தி அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தனர்.

அதில் 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மூட்டைகள், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து முதியவரிடம் விசாரித்தனர். அதில், அவர் சத்துவாச்சாரி வடக்கு குறுக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 60) என்பதும், ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்