காரைக்குடி
காரைக்குடி வீரையன் கண்மாய் பகுதி அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக காரைக்குடி தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட னர். அப்போது கணேசபுரத்தை சேர்ந்த செல்லதுரை (வயது 56) என்பவர் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி, கார், 2 மொபட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.