ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
சின்னசேலம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது மினி லாரி பறிமுதல்
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் போலீசார் அனுமனந்தல் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திவந்தது தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியில் வந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, கச்சிமையலூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராசு மகன் பெரியசாமி(வயது 38) என்பதும் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பெரியசாமியை கைது செய்த போலீசார் மினி லாரியுடன் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விழுப்புரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.