நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் போலீசார் நேற்று ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது மொபட்டில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்த புதுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி, மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் பத்தமடை பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது, லோடு ஆட்டோவில் 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திய போது சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தருவையை சேர்ந்த குமார், டிரைவர் சுடலைமணி ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.