ரேஷன் அரிசி கடத்தியதொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ரேஷன் அரிசி கடத்திய தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-02-23 18:45 GMT

உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி கம்பம்-குமுளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லாரியில் கடத்தி வந்த 17 டன் ரேஷன் அரிசியைபோலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய மதுரை தெற்கு வீதி சேர்ந்த தொழிலாளியான சீனிவாசன் (வயது 54), அதே பகுதியை சேர்ந்த பாலசிங் (48) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சீனிவாசன் மீது ஏற்கனவே 2 திருட்டு வழக்கு இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய அனுமதிக்கும்படி மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகப் பிரியா தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பரிந்துரை செய்தார். சீனிவாசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதையடுத்து சீனிவாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட ஆணையை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்