ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

சுரண்டை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-28 18:45 GMT

தென்காசி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சுரண்டை பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சுரண்டை ஆலடிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வீட்டின் உரிமையாளரான மரியதாஸ் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்