ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி. பட்டினத்தில் ராமநாதபுரம் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டதில் அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 10 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கே.புதுப்பட்டியை சேர்ந்த சாத்தையா(வயது 34), அன்பரசன்(31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.