270 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதுச்சத்திரம் அருகே போலீசார் சுமார் 270 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கதிராநல்லூர் கூட்டுறவு சொசைட்டி அருகே ரேஷன்அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக நாமக்கல் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சுமார் 270 கிலோ ரேஷன்அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது66) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.