40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-02 18:45 GMT

சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் மதகுப்பட்டியை அடுத்த ஏரியூர் விலக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 1600 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி 40 மூடைகளில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த சிவகங்கை பள்ளி தெருவை சேர்ந்த டிரைவர் காளிதாஸ் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்