தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு 1,000 டன் நெல் வந்தது

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு 1,000 டன் நெல் வந்தது

Update: 2022-08-19 21:10 GMT

ஈரோடு

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை, நெல் உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயிலில் ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு நேற்று வந்தது.

இதைத்தொடர்ந்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்