ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்
உப்புக்கோட்டையில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
தேனி மாவட்டத்தில் வட்ட வழங்கல் துறை சார்பில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் உப்புக்கோட்டையில் நடந்தது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், செல்போன் எண் இணைத்தல் மற்றும் ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் தீர்வு காணப்பட்டன. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
முன்னதாக மாவட்ட வழங்கல் அலுவலரும், துணை ஆட்சியருமான இந்துமதி, சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.