பரமத்திவேலூரில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு

பரமத்திவேலூரில் வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்தது.

Update: 2022-06-06 15:57 GMT

பரமத்திவேலூர்:

வாழைத்தார் ஏல சந்தை

பரமத்திவேலூர் தாலுகா காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அணிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் நடைபெறும் வாழைத்தார் ஏல சந்தைக்கு வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

விலை உயர்வு

கடந்த வாரம் வாழைத்தார் சந்தையில் நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் விற்பனையானது.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ஒன்று அதிகபட்சமாக ரூ.450-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் விற்பனையானது. வாழைத்தார்கள் வரத்து குறைந்ததால் அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்