ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது
பிளஸ்-2 தேர்வில் ராணிப்பேட்டை மாவட்டம் 87.30 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
87.30 சதவீதம் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13,314 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 11,623 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 87.30 சதவீதம் ஆகும்.
தேர்வு எழுதிய மாணவர்கள் 6,515 பேரில் 5,360 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 82.27 சதவீதம் ஆகும். அதேபோல் தேர்வு எழுதிய 6,799 மாணவிகளில் 6,263 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.12 சதவீதம் ஆகும்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள 63 அரசு பள்ளிகளில் 8,107 பேர் தேர்வு எழுதியதில் 6,772 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 82.92 சதவீதம் ஆகும். 6 அரசு நிதி உதவி பள்ளிகளில் 1,474 பேர் தேர்வு எழுதியதில் 1,326 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 89.96 சதவீதம் ஆகும். 40 தனியார் பள்ளிகளில் 2,614 பேர் தேர்வு எழுதியதில் 2,565 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 98.13 ஆகும்.
100-க்கு 100
தமிழ் -1, கணிதம் -6, வேதியியல்- 22, இயற்பியல்- 6, உயிரியல்-10, தாவரவியல்-4, விலங்கியல்-1, வணிகவியல்-44, கணக்குப்பதிவியல்- 62, பொருளியல்-24, வரலாறு- 3, கம்ப்யூட்டர் சயின்ஸ் -50, கம்ப்யூட்டர் டெக்னாலஜி -7, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் -48, ஹோம் சயின்ஸ் -9, புள்ளியியல் - 4, பேசிக் எலக்ட்ரிகல்ஸ் -168, புவியியல் - 6, ஆபீஸ் மேனேஜ்மென்ட் -1, வேளாண்மையியல் - 28, தணிக்கையியல் - 45, பேசிக் எலக்ட்ரானிக்ஸ் -18, பேசிக் மெக்கானிக் -37, நர்சிங் -2, டெக்ஸ்டைல்ஸ் -73, வணிக கணிதம் -2 என பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடைசி இடம்
பிளஸ்-2 தேர்வில் 87.30 சதவீதம் தேர்தச்சி பெற்றுள்ள ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.