ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளில் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் 2-வது இடம்
ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளில் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் 2-வது இடம் பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை
ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகளில் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் 2-வது இடம் பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, திமிரி, வாலாஜா, சோளிங்கர், காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம் ஆகிய 7 ஒன்றியங்களில் 288 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 1593 குக்கிராமங்கள் இணைந்துள்ளன. இங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 324 வீடுகள் உள்ளன.
கடந்த ஆண்டு முதல் மத்திய அரசின் ஜல்ஜீவன் மீஷன் திட்டம், 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தில் இந்த கிராமப்புற குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது வரை 1 லட்சத்து 86 ஆயிரத்து 772 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 2,552 வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம் 40 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 81 ஆழ்துளை கிணறுகள் அமைக்க நிர்வாகம் அனுமதி அளித்து, அதற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளின் செயல்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.