ஒச்சேரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ஒச்சேரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த ஒச்சேரியில் உள்ள மக்கா மசூதியில் ரம்ஜான் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் ஒச்சேரியை சுற்றியுள்ள அவளுர், பெரும்புலிபாக்கம், மாமண்டூர், ஆயர்பாடி, சிறுகரும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக்கொண்டானர்.