தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு 'ராமோன் மக்சேசே' விருது அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு 2023-ம் ஆண்டுக்கான ‘ராமோன் மக்சேசே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-01 17:52 GMT

சென்னை,

'ஆசியாவின் நோபல் பரிசு' என்று அழைக்கப்படும் 'ராமோன் மக்சேசே' விருது, ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடுகளில் ஒருமைப்பாடு, துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தனிநபர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான 'ராமோன் மக்சேசே' விருது, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரவி கண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் டாக்டர் ரவிகண்ணன். இவர் இதற்கு முன்பு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்