ரமேஷ் எம்.பி. உள்பட 6 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பண்ருட்டி முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் ரமேஷ் எம்.பி. உள்பட 6 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2022-07-25 17:09 GMT

கடலூர்:

கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி கோவிந்தராசு என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் எம்.பி.யின் உதவியாளர் நடராஜன் (வயது 31), முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல் (49), தொழிலாளர்கள் அல்லாபிச்சை (53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (31), வினோத் (31) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் எம்.பி. கோர்ட்டில் சரண் அடைந்தார். அதன் பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கோவிந்தராசு கொலை வழக்கு தொடர்பாக ரமேஷ் எம்.பி. உள்ளிட்ட 6 பேர் மீதும் 300 பக்க குற்றப்பத்திரிகையை கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகல் நேற்று ரமேஷ் எம்.பி. உள்ளிட்ட 6 பேருக்கும் வழங்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்