வெங்கட்ரமணர் கோவிலில் ராம சங்கீர்த்தனம்
செஞ்சி கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் ராம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
செஞ்சி,
செஞ்சி கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் பவுர்ணமி மற்றும் சனிக்கிழமையை முன்னிட்டு ராம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோலாட்டம் மற்றும் ராம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில் கல்வியாளர் ரங்க பூபதி மற்றும் சாந்தி பூபதி, வக்கீல் வைகை தமிழ்ச்செல்வன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.