ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்:தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாநாட்டில் தீர்மானம்

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட மாநாடு நடந்தது.

Update: 2023-02-26 18:45 GMT

ஆண்டிப்பட்டி அருகே க.விலக்கில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டில் நிறுவன தலைவர் திருமாறன்ஜி, மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் போத்தம்பள்ளியில் கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். ராமர் பாலத்தை தேசிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டிப்பது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்