ராம பக்த பால ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு

சீர்காழி ராம பக்த பால ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு நடந்தது

Update: 2023-04-24 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தியாகி சாமிநாத தெருவில் ராம பக்த பால ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை நிறைவடைந்து யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்