முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் பேரணி
தென்காசியில் முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் பேரணி நடந்தது.
தென்காசியை அடுத்த ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் உலக முதுகு தண்டுவட தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று காலையில் முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகள் பேரணி நடைபெற்றது. பேரணியை தென்காசி சக்திநகரில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து அமர்சேவா சங்கத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. நாளை (திங்கட்கிழமை) வரை கருத்தரங்கு நடக்கிறது. நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அமர்சேவா சங்க தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.