மனைப்பட்டா வழங்கக்கோாி ஊர்வலம்

கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்கக்கோாி ஊர்வலம் நடந்தது.

Update: 2022-06-06 17:27 GMT

மயிலாடுதுறை;

மயிலாடுதுறையில் கோவில் உள்ளிட்ட அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ. ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, தரங்கம்பாடி சாலை வழியாக கச்சேரி சாலையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கோவில் உள்ளிட்ட அனைத்து சமய நிலையங்களில் குடியிருக்கும் ஏழைகளுக்கு இலவசமாகவும், வசதி படைத்தவர்களுக்கு உரிய விலையை நிர்ணயித்தும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர். இதில் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு சங்கத்தின் மாநில அமைப்பாளர் சீதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்